கூலிமில் தொழிற்சாலை ஊழியர் விபத்தில் மரணம்!

top-news
FREE WEBSITE AD

கூலிம், ஜன 8: ஜலான் தித்தி காராங்கான் - பாலிங் பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் டிரெய்லர் மீது மோதியதில் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

 இச்சம்பவத்தில், 23 வயதுடைய நபர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

கூலிம் லாஜிஸ்டிக்ஸ் ஹப் முன்பு நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 8.30 மணியளவில் பொதுமக்களிடம் இருந்து தகவல் கிடைத்ததாக மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் சுல்கிஃப்லி அஜிசான் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில், மோட்டார் சைக்கிளில் வந்தவர் சிவப்பு விளக்கு எச்சரிக்கையைத் தாண்டிச் சென்றதால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அஜிசான் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *