மடானி மார்ட் அரசு நிதியைச் சார்ந்திருக்கவில்லை! - துணையமைச்சர் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

ஜொகூர்  பாரு, ஏப் 4: புதிய மடானி  மார்ட் முன்னெடுப்பு அரசாங்க நிதியைச் சார்ந்திருக்கவில்லை என்றும், மாறாக தொழில்முனைவோருடன் இணைந்து உரிமம் வழங்கும் மாதிரியில் செயல்படுவதாகவும், மேலும் ஒவ்வொரு விற்பனை நிலையமும் தனியாருக்குச் சொந்தமானது என்று ம்துணை அமைச்சர் ஃபுசியா சல்லே கூறினார்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சின்  துணை அமைச்சரான ஃபுசியா, வர்த்தக முத்திரை உரிமையாளரான யாயாசன் மடானி, செயற்கை நுண்ணறிவின் ஆதரவுடன் பயிற்சி, அமைப்புகள், விலை நிர்ணயம் மற்றும் சில்லறை விற்பனைப் பகுப்பாய்வு உள்ளிட்ட சூழல் அமைப்பை நிர்வகிப்பதாகக் கூறினார்.

யாயாசன் மடானியின் விநியோகச் சங்கிலி ஆதரவுடன் தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை நடத்த இந்த மாதிரி நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

அரசாங்கத்துடன் இணைந்த யாயாசன் மடானி, அரசாங்க நிதியைப் பெறுவதில்லை மற்றும் மடானி மார்ட்டுக்கு மூலதனம் வழங்குவதில்லை. ஒவ்வொரு விற்பனை நிலையமும் தனியாருக்குச் சொந்தமானது என்று நேற்று தொடங்கப்பட்ட மடானி மார்ட் முன்னெடுப்பு  குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

முதல் மடானி மார்ட் விற்பனை நிலையம் நேற்று பஹாங், குவந்தான் அருகே இந்திரா மகோத்தாவில் திறக்கப்பட்டது.

அரசு மூலதனம் இல்லாமல், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை மிகவும் விரிவான மற்றும் இலக்கு சார்ந்த முறையில் சமாளிப்பதற்கான ஒரு  அணுகுமுறையாக, மலிவு விலையில் அன்றாடத் தேவைகளை வழங்கும் ஒரு சமூக சில்லறை விற்பனைக் கருத்தே மடானி மார்ட் முயற்சி என்று ஃபுசியா கூறினார்.

மேலும், உள்ளூர் சமூகத்தினரும் தொழில்முனைவோரும் இந்த வணிகத்தில் பங்கேற்பதற்கு மடானி மார்ட் வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *