ஷா ஆலம் குளத்தில் மாதுவின் உடல்!
- Shan Siva
- 09 Jan, 2026
கோலாம்பூர், ஜன 9: ஷா ஆலம், புக்கிட் பண்டாராயா பகுதியில் உள்ள Section U11-இல் அமைந்துள்ள ஒரு மழைநீர் சேமிப்பு குளத்தில், முதிய பெண் ஒருவரின் உடல் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் புதன்கிழமை காலை தெரியவந்ததாக ஷா ஆலம் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் மீன் பிடித்து வந்த ஒருவர், குளத்தில் மிதந்த உடலைக் கண்டறிந்து, காலை 11.30 மணியளவில் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். உயிரிழந்தவர் 70 வயதுக்கு மேற்பட்ட உள்ளூர் பெண் என்றும், அருகிலுள்ள வீட்டுப் பகுதியில் வசித்து வந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ராம்சே எம்போல் கூறினார்.
மேலும், பிரேதப் பரிசோதனையில், அந்தப் பெண் உயிரிழந்து இரு நாள்கள் ஆனதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நாளில் மாலை 6 மணியளவில், சம்பந்தப்பட்ட மாதுவின் குடும்பத்தினர் போலீசாரைந்த் தொடர்பு கொண்டு, அவரது அடையாளத்தை உறுதி செய்தனர்.
உயிரிழந்தவர் தனியாக வசித்து வந்தவர் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்,
சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



