ஹாடி - முகைதீன் சந்திப்பு புத்ராஜெயாவைக் கைப்பற்ற ஓர் அடித்தளம்! - ரசாலி
- Shan Siva
- 16 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 16: திரெங்கானுவின் ருசிலாவில் பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற நேற்றைய சந்திப்பு, 16வது பொதுத் தேர்தலில் புத்ராஜயாவைக் கைப்பற்றுவதற்கான அடித்தளத்தை பெரிகாத்தான் நேஷனல் அமைக்கத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது என்று திரெங்கானு பெர்சசாத்து தலைவர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு, பிஎன்-ஐ வலுப்படுத்துவதிலும், பெர்சாத்து மற்றும் பாஸ் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்திய அடையாளம் தெளிவாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரிகாத்தான் நேஷனல் இனி வெறும் பேச்சோடு நின்றுவிடவில்லை, மாறாக 16வது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக திட்டமிட்டு வருகிறது என்று அவர் ஒரு ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.
இந்த சந்திப்பு ஒரு அடையாளப்பூர்வமானது அல்ல, மாறாக வெற்றியை நோக்கிய ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறிய அவர், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு பெரிகாத்தான் நேஷனலின் முக்கிய சொத்தாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பெரிகாத்தான் நேஷனலின் தேர்தல் இயந்திரத்தை முன்கூட்டியே செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ரசாலி வலியுறுத்தினார்.
விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட்டால், கூட்டணி தயாராக இருப்பதை உறுதி செய்வதில் இது மிக முக்கியமானது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



