ஹாடியின் அறிவு விலைமதிப்பற்றது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 28: அப்துல் ஹாடி அவாங், பாஸ் கட்சியின் தலைவராகத் தொடர இனி தகுதியற்றவர் என்ற ஆய்வாளர் ஒருவரின் கூற்றினை பாஸ் கட்சியின் பல தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

ஹாடியின் கவர்ச்சி, அறிவு மற்றும் அனுபவத்தை மேற்கோள் காட்டி, கட்சியை வழிநடத்துவதில் ஹாடி மேம்பட்டவர் என்று பாஸ் கட்சியைச் சேர்ந்த அமர் அப்துல்லா கூறினார்.

அவர் பலவீனமாகத் தோன்றினாலும், உறுப்பினர்கள் இன்னும் கட்சியை வழிநடத்த அவரை நம்பியிருக்கிறார்கள்.

இருப்பினும், நிக் அப்துல் அஜீஸ் நிக் மாட்டின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதா அல்லது புத்ராஜெயாவைக் கைப்பற்றும் முயற்சிகளில் கட்சியைத் தொடர்ந்து வழிநடத்துவதா என்பதை முடிவு செய்வது அவரது விருப்புரிமை மற்றும் ஞானத்தைப் பொறுத்தது என்று அவர் FMT இணைய ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கொந்தளிப்பான அரசியல் நிலப்பரப்பில் கட்சியை வழிநடத்துவதில் ஹாடியின் தலைமை மிக முக்கியமானது என்று பாஸ் உலமா கவுன்சில் தலைவர் அஹ்மத் யஹாயா வலியுறுத்தினார்.

 மலேசியாவில் இஸ்லாமியக் கொள்கைகளை தொடர்ந்து வலுப்படுத்துவதை உறுதி செய்வதற்கு ஹாடியின் அறிவு விலைமதிப்பற்றது என்று பாஸ் அறிஞர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஹாடி இனி பாஸ்-ஐ வழிநடத்த தகுதியற்றவர் என்று ஒரு ஆய்வாளரின் கருத்துக்களை நேற்று ஒரு செய்தித்தாள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *