ஹாடி அவாங் பிரதமர் வேட்பாளரா?!

- Shan Siva
- 17 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 17: பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை பெரிக்காத்தான் நேஷனலுக்கான பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்ற பாஸ் கட்சியின் உலமா குழு உறுப்பினர் மொக்தார் செனிக் முன்மொழிந்ததை அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி கேலி செய்துள்ளார்.
பாஸ் எடுக்கும்
நிலைப்பாடுகளில் உள்ள முரண்பாடுகளில்தான் அதன் சிக்கல் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர்
வேட்பாளரை முன்கூட்டியே முன்மொழியும் நடைமுறை நபிகள் நாயகத்தின் போதனைகளுடன்
ஒத்துப்போகவில்லை என்று ஹாடி முன்பு கூறியதை மொக்தார் மறந்துவிட்டார். ஆனால்
இப்போது கட்சி இதைச் சரியாகச் செய்து வருகிறது என்று புவாட் ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.
நேற்று, ஒரு நாட்டின் தலைவருக்குத் தேவையான குணங்களை
மொக்தார் பட்டியலிட்டுள்ளதாகவும், அடுத்த பொதுத்
தேர்தலுக்கான எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருப்பதற்கு ஹாடிக்குத் தேவையான
தகுதி இருப்பதாகவும் மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
பாஸ் எடுத்த
முரண்பாடான நிலைப்பாடுகள்தான் அம்னோவுடன் தற்போது செயலிழந்த முஃபாக்கத் நேஷனல்
கூட்டணி ஒருபோதும் பலனளிக்காததற்குக் காரணம் என்று புவாட் கூறினார்.
மலேசியர்கள்
இஸ்லாமிய அரசாங்கத்தை விரும்பினாலும், ஹாடி பிரதமராக இருக்க தகுதியற்றவர் என்று புவாட் கூறினார்.
அவரது 'ஃபத்வாக்கள்' அவ்வளவு எளிதாக மாற முடிந்தால், பொருளாதார மற்றும் நிர்வாகக் கொள்கைகளும் தொடர்ந்து
மாற்றங்களுக்கு உள்ளாகி, மக்களை
குழப்பத்தில் ஆழ்த்தும் என்ற கவலை உள்ளது என்று அவர்
கூறினார்.
முன்னதாக,
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை வீட்டுக்
காவலில் வைக்க அனுமதிக்கும் அரச உத்தரவை நிறைவேற்ற அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும்
முயற்சியில் பாஸ் அவருக்கு ஆதரவளித்ததை அமானா தலைவர் முகமது சாபு கேலி செய்தார். இது இஸ்லாமியக் கட்சியின் "அரசியல்
ஃபத்வாக்களில்" ஒன்று என்று விவரித்தார்.
பாஸ் ஆன்மீகத்
தலைவர் ஹாஷிம் ஜாசின் கடந்த நவம்பரில் தனது கட்சி அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற
பிரதிநிதிகள் மற்றும் வலுவான அடிமட்ட இயந்திரம் காரணமாக பிஎன்-ஐ வழிநடத்த மிகவும்
பொருத்தமானது என்று வாதிட்டார்.
இருப்பினும்,
பெர்சாத்து துணைத் தலைவர் அஹ்மத் பைசால் அசுமு,
பெரிக்காத்தான் தலைவர் முகைதீன் யாசின் பிரதமர்
பதவிக்கான கூட்டணியின் ஒரே வேட்பாளராகத் தொடர்ந்தார் என்றார்.
கெராக்கான்
தலைவர் டொமினிக் லாவ், பிரதமருக்கான
தகுதிகள் ஒரு கட்சியின் நாடாளுமன்ற இடங்களுக்கோ அல்லது அடிமட்ட ஆதரவின் பலத்திற்கோ
மட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *