அப்பா நான் ஜெயிச்சிட்டேன்....

top-news

குளுவாங், செப் 29: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர் சையத் ஹுசைன் சையத் அப்துல்லா, இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்து நான்கு நாட்களுக்குப் பிறகு இறந்த அவரது தந்தையின் கல்லறைக்குச் செல்வதுதான் முதல் வேலை என்று தெரிவித்துள்ளார்.

குளுவாங் அம்னோ இளைஞரணித் தலைவருமான சையத் ஹுசைன், தனது தேர்தல் வெற்றியைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள முதலில் கம்போங் மெலாயு முஸ்லிம் கல்லறைக்குச் செல்லவிருப்பதாகக் கூறினார்.

இடைத்தேர்தலில் 20,648 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர்,  செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் அணியின் ஒத்துழைப்பால் இது நிகழ்ந்தது என்று என் அப்பாவிடம் கூற விரும்புகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அவரது தந்தை, சையத் அப்துல்லா சையத் ஹமீத்,  புற்று நோயால் பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்தபடியே, கடந்த  செப்டம்பர் 10 ஆம் தேதி குளுவாங்கில் உள்ள மருத்துவமனையில் இறந்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்