ரஃபிஸியின் பெர்சமா வருகை பெரிக்காத்தானுக்கு நன்மையே! - அரசியல் ஆய்வாளர் கருத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 23: ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர் PKR கட்சியிலிருந்து விலகி, பார்ட்டி பெர்சமா மலேசியா என்ற புதிய அரசியல் தளத்தை நிறுவிய முடிவு, இறுதியில் பெரிகாத்தான் நேஷனலுக்கு (PN) நன்மை பயக்கக்கூடும் என்று மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஷாஸா ஷுக்ரி தெரிவித்துள்ளார்.

முற்போக்கு வாக்காளர்களைக் கவர்வதன் மூலம், பெர்சமா மலாய் அல்லாதவர்களின் வாக்குகளைப் பிரிக்கும் என்றும், இதன் வழி குறிப்பாகக் கலப்புத் தொகுதிகளில் PN வெற்றிக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் கூறினார்.

பொதுவாகப் பக்காத்தான் ஹரப்பானின் (PH) கோட்டைகளாகக் கருதப்படும் இந்தத் தொகுதிகளில், பெரிக்காத்தானின் கவனம் மலாய் வாக்காளர்கள் மீது விழும் என்றும் அவர் கூறினார்.

மலாய் வாக்காளர்கள் மீது கவனம் செலுத்துவதே PN-இன் சிறந்த வழியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, ​​PN-இன் ஆதரவுத் தளம் பெரும்பாலும் மலாய்களாகவே இருக்கும் என்பது நமக்குத் தெரியும். மலாய் அல்லாதவர்களைக் கவர PN முயற்சிப்பது வளங்களை வீணடிப்பதாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சில இந்திய வாக்காளர்கள் PN-ஐ ஆதரிக்கக்கூடும், ஆனால் சீன வாக்காளர்கள் அவ்வாறு செய்வார்கள் என்பது சந்தேகமே என FMT ஊடகத்திற்கு வழங்கிய செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *