கிள்ளானில் பிரமாண்டம் காட்டிய ஒளிப்பூக்கள்!

top-news

கிள்ளான், அக் 31: தித்திக்கும் தீபாவளி பெருநாள் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பட்டாசுகள் விண்ணைப் பிளக்க எங்கும் மக்கள் பரவசத்துடன் தங்கள் திருவிழாவை வரவேற்று மகிழ்கின்றனர்.

அந்த வகையில் கிள்ளான் லிட்டில் இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு நிகழ்த்தப்பட்ட வானவேடிக்கை இடைவிடாது தொடர்ந்ததில் வானம் முழுக்க வண்ண வண்ணமாய் ஒளித்துளிகள் பூத்து தீபாவளியின் பிரமாண்டந்த்தைக் காட்டியது.

கிள்ளான் தெங்கு கிளானாவின் அனைத்து வீதிகளிலிருந்தும் இடைவிடாது பறந்து சென்று வர்ண ஜாலம் காட்டின ஒளிப்பூக்கள்.

ஏராளமான மக்கள் கலந்துகொண்டு உற்சாகத்தில் திளைத்தனர். ஆடல், பாடல் என தெங்கு கிளானா விழாக்கோலத்தில் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்