IJN-னில் மகாதீர்! கவலைப்படத் தேவையில்லை! - மொக்சானி மகாதீர் தகவல்
- Shan Siva
- 30 Sep, 2026
கோலாலம்பூர், செப் 30: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது மருத்துவக் கண்காணிப்புக்காக தேசிய இதய நிறுவனத்தில் (IJN) அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் மொக்சானி தெரிவித்துள்ளார்.
101 வயதான அவர்
நேற்று IJN-இல் அனுமதிக்கப்பட்டதாக மொக்சானி கூறியதாக
'பெர்னாமா' செய்தி நிறுவனம்
தெரிவித்தது.
கவலைப்படத்
தேவையில்லை என்றும், தனது தாயார் டாக்டர் ஹஸ்மா அலியின்
மறைவைத் தொடர்ந்து, கண்காணிப்பு நோக்கத்திற்காகவே தனது
தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார்.
அவர்
கண்காணிப்புக்காக IJN-இல் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு
நாட்கள் 'துன் எம்' (Tun M)-க்கு
மிகவும் மன அழுத்தத்தை அளிப்பதாக இருந்தன; ஆனால் தற்போது அவர்
நலமாக உள்ளார், கவலைப்படத் தேவையில்லை என்று
'பெர்னாமா'விடம் அவர் கூறினார்.
மகாதீரின் அலுவலகப்
செய்தித் தொடர்பாளர் சூஃபி யூசோஃப்,
முன்னாள் பிரதமர்
நலமாக இருப்பதாகவும், IJN-இல் ஓய்வெடுத்து வருவதாகவும்
தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

