மரணப்படுக்கையில் ஜாஹிர் நாயக்கா?!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 10: சர்ச்சைக்குரிய சமயபோதகர் டாக்டர் ஜாஹிர் நாயக், அரசு மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களை அடிப்படை இல்லாத பொய் செய்தி என அவர் மறுத்துள்ளார்.

“இது முழுக்க முழுக்கப் போலிச் செய்தி. என் பெயரைக் களங்கப்படுத்தவே இவ்வாறு பரப்பப்படுகிறது. இது அர்த்தமற்ற குற்றச்சாட்டு என்று அவர் FMT-க்கு தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை தனது வழக்கறிஞர் அக்பர்தீன் அப்துல் காதர் மூலம் அவர் நிராகரித்தார்.

அக்பர்தீன், “ஜாஹிர் நாயக் முழுமையான உடல்நலத்துடன் இருக்கிறார்” என்றும் தெரிவித்தார்.

X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில், ஜாகிர் நாயக் கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் (HKL) வென்டிலேட்டரில் இருப்பதாகவும், “இறுதி மூச்சினை  எண்ணிக் கொண்டிருக்கிறார்” என்றும் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது.

மேலும், அவர் அதிக பாதுகாப்பு கொண்ட வார்டில், சிகிச்சை பெறுவதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மறுப்பு, சுமார் நான்கு மாதங்களுக்கு முன் அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவிய தகவல்களை ஜாஹிர் நாயக் மறுத்ததற்குப் பிறகு வெளியாகியுள்ளது. அப்போது அந்த குற்றச்சாட்டுகளை அவர் “பொறுப்பற்ற நபர்கள் பரப்பும் வெறுப்பு பேச்சு” எனக் கூறியிருந்தார்.

ஜாஹிர் நாயக்கின் பிரபலத்தைக் காரணமாகக் கொண்டு, அவரது புகழை சேதப்படுத்தவே இத்தகைய பொய்ச் செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்றும் அக்பர்தீன் முன்னதாக தெரிவித்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *