மக்கோத்தா தேர்தல்! பாரிசான் அபார வெற்றி!

top-news

குளுவாங், செப் 29: ஜொகூர், மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில் பாரிசான் நேசனலின் சையத் ஹுசைன் சையத் அப்துல்லா 20,648 வாக்குகள் பெரும்பான்மையுடன் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் அதிகாரி அசுராவதி வாஹித், டேவான் துங்கு இப்ராகிம் இஸ்மாயிலில் இரவு 9.11 மணியளவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

40 வயதான சையத் ஹுசைன் 27,995 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர் முகமது ஹைசான் ஜாபர் 7,347 வாக்குகளைப் பெற்றார்.

தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, 66,318 மக்கோத்தா வாக்காளர்களில் 53.84% பேர் இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்துள்ளனர்.

மார்ச் 2022ல் நடந்த  தேர்தலில் 55.7% வாக்குகள் பதிவாகியதில் இருந்து இது சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது!


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்