அரசு நியமன இயக்குநர்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்கக்கூடாது – ஷம்சுல் அஸ்ரி வலியுறுத்தல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 8 –

அரசு தொடர்புடைய நிறுவனங்கள், அரசு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளில் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் இயக்குநர் குழு உறுப்பினர்கள் வெறுமனே கூட்டங்களில் பங்கேற்பவர்களாக இல்லாமல், நிர்வாகத் திறன் மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

அரசு அதிகாரிகள் இயக்குநர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படும் போது, அவர்கள் தொழில்முறை கருத்துகளைத் துணிச்சலுடன் முன்வைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு முன்மொழிவையும் விரிவாக ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நிர்வாக ஒழுங்கு, பொறுப்புணர்வு மற்றும் விதிமுறை பின்பற்றுதல் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதன் மூலம் நிர்வாக பலவீனங்கள் மற்றும் விதிமுறை மீறல்கள் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டு சரிசெய்ய முடியும். அதேவேளையில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக அபாயங்களையும் குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *