PKR தேர்தலுக்குள் ஊடுறுவிய ம.இ.கா மாவட்டத் தலைவர்! காவல்துறையில் புகார்!

top-news

ஏப்ரல் 10,

பி.கே.ஆர் தேர்தலில் மற்ற கட்சியினர் தலையிட வேண்டாமென பி.கே.ஆர் கட்சியின் தகவல் தொடர்பு துணைத் தலைவரும் ரவாங் சட்டமன்ற உறுப்பினருமான Chua Wei Kiat இன்று தெரிவித்தார். செலாயாங் மாவட்ட ம.இ.காவைச் சேர்ந்த SIVANYANAM NALLATHAMBY எனும் நபர் கடந்த அக்டோபர் மாதம் பி.கே.ஆர் கட்சியில் உறுப்பினராகச் இணைந்துள்ளதாகவும் கட்சி உறுப்பினர் பட்டியலிலும் அவர் பெயர் இருப்பதாகவும் உற்கட்சி விவகாரனங்களை அறிந்துக் கொள்வதற்காகச் சம்மந்தப்பட்ட நபர் பி.கே.ஆரில் இணைந்துள்ளதாக Chua Wei Kiat தெரிவித்தார்.

ம.இ.காவில் குறிப்பிட்ட தொகுதியில் தலைவராகவும் இருந்து கொண்டு பி.கே.ஆர் கட்சியிலும் உறுப்பினராக இருக்கும் சம்மந்தப்பட்ட ம.இ.கா உறுப்பினருக்கு எதிராகக் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளதாக Chua Wei Kiat தெரிவித்தார். இதனை இலகுவாகக் கடந்து விட முடியாத என்றும் இது மாதிரி இன்னும் எத்தனை ம.இ.காவினர் பி.கே.ஆரில் உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்பதையும் கட்சி தலைமை ஆய்வு நடத்தவிருப்பதாகவும் Chua Wei Kiat தெரிவித்தார். அரசியலில் கட்சிக்கு விசுவாசமாக இருங்கள். ஒரு கட்சியில் பதவியை அனுபவித்துக் கொண்டே மற்றொரு கட்சியிலும் உறுப்பினராக இரட்டை வேடமிட வேண்டாம் என்றும் இது தொடர்பாகக் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக Chua Wei Kiat தெரிவித்தார்.

PKR nafi penglibatan ahli parti lain dalam pemilihan parti mereka selepas MIC Selayang dilaporkan terlibat. Chua Wei Kiat sahkan laporan polis dibuat terhadap Sivanyanam Nallathamby yang didakwa memegang keahlian dua parti secara serentak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *