கிள்ளானில் சாய்பாபா விழா! வெகு விமரிசையாக 10 நாள் திருவிழா!
- Shan Siva
- 27 May, 2026
கிள்ளான், மே 27: கிள்ளான், தெங்கு
கிள்ளானா, பூக்கடை தெருவில்
அமைந்துள்ள மலேசிய சீரடி சாய்பாபா சமாஜம் மற்றும் கிரியா பாபாஜி ஆஸ்ரமத்தின் 18ஆம்
ஆண்டு சீரடி சாய் கலைவிழா மற்றும் இரத ஊர்விழா பெருநிகழ்வு வரும் ஜூன் 12 -ஆம்
தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூன்
21 ஆம் தேதி வரை வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை
தொடங்கி 20 ஆம் தேதி சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி தொடங்கி சிறப்பு
கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
20 ஆம் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு பால்குடம் எடுக்கும்
நிகழ்வு தொடங்குகிறது. கிள்ளான் ஸ்ரீ நகர
தண்டாயுதபாணி ஆலயத்தில் இருந்து தொடங்கும் பால்குடம் எடுக்கும் நிகழ்வில்
கலந்துகொள்ளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், அங்கிருந்து காலை 6 மணிக்கு பால் குடம் சுமந்து பாதயாத்திரையாக நடந்து வந்து
பாபாவிற்குத் தங்கள் கரங்களிலாலேயே அபிசேகமும் செய்யும் இறைபுண்ணியத்தைப் பெறலாம்.
21 ஆம் தேதி பாபா இரத ஊர்வலத்தில் கிள்ளன் நகரில் வீதி உலா
வந்து பக்த மெய்ன்பர்களுக்குத் தரிசனம் தருகிறார். இந்த இரத ஊர்வலத்தில் கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்
குதிரையாட்டம் என பாரம்பரிய கிராமியக் கலை நடனங்களும் திருவிழாவின் உற்சாகமாய்
அழகுகாட்டவிருக்கிறது.
எல்லா நாள்களும் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் கலை
நிகழ்ச்சிகளும் சிறப்பாகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்த பெருமக்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டு அருள்
பெற்று மகிழ ஏற்பாட்டுக் குழுவினர் அன்போடு அழைக்கிறார்கள்.
பால் குடம் எடுக்க விரும்பும் பக்த மெய்யன்பர்கள் RM 36 செலுத்தி ஆலயத்திலேயே பால் குடம் பெற்றுக்கொள்ளலாம்.
- மேலதிக விவரங்களைப் பெற கோயில் தலைவர் கண்ணன் அவர்களை
012 469 6849 என்ற எண்களிலும் அல்லது திருவிழா தலைவர் தியாகராஜன் அவர்களை 019 356
9368 என்ற எண்களிலும் அல்லது
03-3323 9319 என்ற எண்களில் ஆலய
நிர்வாகத்தோடு தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



