புத்ராஜெயாவைக் கைப்பற்றும் நோக்கில் பாஸ்! 126 தொகுதிகள் இலக்கு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 14: அடுத்த பொதுத் தேர்தலுக்கு (GE16) முன்னதாக, வெற்றிபெற வலுவான வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்ட 126 நாடாளுமன்றத் தொகுதிகளில், பாஸ் (PAS) மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) ஆகியவற்றின் தேர்தல் இயந்திரம் தனது ஆயத்தப் பணிகளை மையப்படுத்தியுள்ளதாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், பெரிக்காத்தான் நேஷனலின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

இந்த 126 தொகுதிகளில் சரவாக் மாநிலத் தொகுதிகள் அடங்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஸ் கட்சி இந்த 126 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என்றாலும், அத்தொகுதிகளில் போட்டியிடும் ஒத்த கருத்துடைய கூட்டணிக் கட்சிகளுக்கு உதவுவதே பாஸ் கட்சியின் கொள்கை மற்றும் வழக்கமாகும் என்று அவர் கூறினார்.

எந்தெந்தத் தொகுதிகளில் பாஸ் போட்டியிடும் என்பது குறித்த முடிவு கட்சியின் உயர்மட்டத் தலைமையிடமே விடப்படும் என்று அனுவார் தெரிவித்தார்.

15-வது பொதுத் தேர்தலில் (GE15) பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி 74 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றது; அதில் பாஸ் கட்சி 43 இடங்களைக் கைப்பற்றியது.

புத்ராஜெயாவைக் கைப்பற்றும் ஒரு பகுதியாக, 16-வது பொதுத் தேர்தலில் 80 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல பாஸ் கட்சி இலக்கு நிர்ணயித்துள்ளதாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் அக்கட்சியின் உதவித் தலைவர் அமார் அப்துல்லா கூறியதாகத் தகவல்கள் வெளியாகின.

15-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே குறைந்தது 40 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்கை பாஸ் நிர்ணயித்திருந்ததாகவும், இறுதியில் மக்களவையில் (Dewan Rakyat) உள்ள 222 இடங்களில் 43 இடங்களைக் கைப்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *