நஜிப் - டாமி தாமஸ் வழக்கு முடிவுக்கு வந்தது! - நஜிப் சமரசம்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜன 19:  முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், சட்டத்துறை முன்னாள் தலைவர் டாமி தாமஸ் மற்றும் GB Gerakbudaya Enterprise  நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்திருந்த அவதூறு வழக்கை சமரசத்தின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். 

டாமி தாமஸின் சுயசரிதை நூலில் உள்ள சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இரு தரப்பினரின் வழக்கறிஞர்களும் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதி காதிஜா இத்ரிஸ் முன்னிலையில் இந்த சமரசம் பதிவுசெய்யப்பட்டது. 

இரு தரப்புகளின் ஒப்புதல் தீர்ப்பின் விதிமுறைகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, முறையீட்டாளரின் சிவில் வழக்கு செலவில்லாமல் மற்றும் மீண்டும் தாக்கல் செய்யும் உரிமை இன்றி திரும்பப் பெறப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார். 

டாமி தாமஸின் ‘My Story: Justice in the Wilderness’ நூலில்  “Altantuya” என தலைப்பிடப்பட்ட 42ஆம் அத்தியாயத்தில் இடம்பெற்ற கருத்துகள் அவதூறானவை எனக் கூறி, நஜிப் ரசாக் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கில், பெக்கான் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினரான நஜிப் ரசாக், இழப்பீடு, அவதூறான சொற்களை நீக்க உத்தரவு, மன்னிப்பு கோரல் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய வெளியீடுகளைத் தடுக்க நிரந்தர தடை உத்தரவு ஆகியவற்றை கோரியிருந்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *