நஜிப் வீடு சிறைச்சாலையாக அறிவிப்பு! உள்துறை அமைச்சர் உத்தரவு!

top-news

கோலாலம்பூர. நவ 7: மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் தாமான் டூத்தா பகுதியில் உள்ள இல்லம், சட்டப்படி காவலில் வைக்கப்படும் நபர்களைத் தடுத்து வைப்பதற்கான சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் ஜாலான் லங்காக் டூத்தா, எண் 11 என்ற முகவரியில் அமைந்துள்ள நஜிப் ரசாக்கின் இந்த இல்லத்தைச் சிறைச்சாலையாக அறிவித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறைச்சாலைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, அந்த இல்லத்தில் உள்ள அனைத்து கட்டடங்களும், மொத்தம் 4,559 சதுர மீட்டர் நிலப்பரப்பும் சிறைச்சாலையின் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கிடையில், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதி முறைகேடு வழக்கில் நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 5 கோடி ரிங்கிட் அபராதத் தொகை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் அவருக்கு எதிரான அபராதம் தொடர்பாக விடுவிப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முன்னதாக வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய அரச மன்னிப்பின் அடிப்படையில், நஜிப் ரசாக் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த ஏற்பாட்டின்படி, 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை அவர் வீட்டுக் காவலில் இருக்க வேண்டும்.

ஆனால், இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் இன்று மாலை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அரச மன்னிப்பின் சட்ட விளக்கம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் விடுவிப்பு உத்தரவின் தாக்கம் ஆகியவை குறித்து கூடுதல் ஆய்வு செய்து தெளிவுபடுத்தும் வரை, வீட்டுக் காவல் நடைமுறையை ஒத்திவைக்க வேண்டும் என்றும், அதுவரை நஜிப் ரசாக்கை காஜாங் சிறைச்சாலையிலேயே தொடர்ந்து தடுத்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனால், நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் நடைமுறை எப்போது அமலுக்கு வரும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்