பக்காத்தானின் பலவீனமே BN - PN ஒத்துழைப்பு! இது 16-வது பொதுத்தேர்தலைப் பாதிக்கலாம்! - அரசியல் ஆய்வாளர்கள் கருத்து
- Shan Siva
- 19 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 19: பாரிசான் நேஷனல் மற்றும் பாஸ் இடையிலான தேர்தல் ஒத்துழைப்பு, ம.சீ.ச-வை அரசியல் ரீதியாக சிக்கலான நிலைக்கு தள்ளியுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லாவ் சே வெய் கூறுகையில், BN–PAS கூட்டணி ம.சீ.ச. வேட்பாளர்களுக்கு பாஸ் ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெற உதவும் என்றார். சமீபத்தில் நடைபெற்ற ஜொகூர் மாநிலத் தேர்தலில், பெரிகாத்தான் நேஷனல் போட்டியிடாத தொகுதிகளில் BN-க்கு ஆதரவளிக்குமாறு பாஸ் தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, ம.சீ.ச. தனது இடங்களின் எண்ணிக்கையை 4-இலிருந்து 8-ஆக இரட்டிப்பாக்கியது. இதனால் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்தாலும், பாரம்பரிய சீன வாக்காளர்களின் ஆதரவை இழக்கும் அபாயமும் இருப்பதாக லாவ் சே வெய் எச்சரித்தார்.
மறுபுறம், சன்வே பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட், பக்காத்தான் ஹராப்பானின் பலவீனமே BN–PAS ஒத்துழைப்புக்கு வழிவகுத்துள்ளதாகவும், நெகிரி செம்பிலானில் PH தோல்வியடைந்தால், 16-வது பொதுத் தேர்தலிலும் BN மற்றும் பெரிகாத்தான் நேஷனல் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், ஜொகூருடன் ஒப்பிடுகையில் நெகிரி செம்பிலானில் ம.சீ.ச. பலம் குறைவாக இருப்பதால், BN–PAS கூட்டணி வென்றால், சீனர் உள்ளிட்ட மலாய் அல்லாத வாக்காளர்கள் ம.சீ.ச. மீது நம்பி வைக்க தயங்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



