விஜய் பாணியில் அகிலேஷ் யாதவ்: உ.பி. தேர்தல் பிரசாரத்துக்குப் பிரமாண்ட பஸ் தயார்
- Surendran Sumdraraj
- 22 Sep, 2026
லக்னோ: 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது தேர்தல் பிரசாரத்திற்காகப் பிரமாண்டமான சிவப்பு நிற அதிநவீன பஸ்ஸை தயாரித்துள்ளார்.
இந்தப் பிரசார பஸ்ஸை, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் தேர்தல் பிரசார பஸ்ஸை வடிவமைத்த அதே தொழில்நுட்பக் கலைஞர் உருவாக்கியுள்ளதாக தினத்தந்தி செய்தி தெரிவித்துள்ளது.
பஸ்ஸில் தலைவர்களுடன் அவசர ஆலோசனைகளை நடத்துவதற்கான கான்பிரன்ஸ் ஹால், நவீன கழிப்பறை உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், மக்கள் கூட்டம் நடைபெறும் இடங்களில் பஸ்ஸின் கூரை வழியாக மேலே வந்து அகிலேஷ் யாதவ் நேரடியாக பிரசாரம் செய்யும் வகையிலும் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் பிரச்சார வாகனங்களில் கட்சியின் பல முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை பஸ்ஸின் வெளிப்புறத்தில் அகிலேஷ் யாதவின் புகைப்படம் மட்டுமே பிரதானமாக இடம்பெற்றுள்ளது. இதனை விஜய்யின் பிரச்சார பாணியுடன் ஒப்பிட்டு அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



