போலி பாஸ்போர்ட் வைத்திருந்த குடிநுழைவு அதிகாரி கைது!
- Thinagaren Sanggaren
- 08 Dec, 2025
டிசம்பர் 8,
மலேசியா சிங்கப்பூர் எல்லை பாதுகாப்புச் சோதனை அதிகாரி போலி பாஸ்போர்ட்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 11.30 மணியளவில் 32 வயதான குடிநுழைவுத் துறை அதிகாரி சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அவரிடம் தலைமை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டதுடன் அவரின் மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 போலி பாஸ்போர்ட்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் ஜொகூர் மாநில AKPS தலைமை அதிகாரி Roszita Dim தெரிவித்தார்.
32 வயதானக் குடிநுழைவுச் சோதனை அதிகாரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் Roszita Dim தெரிவித்தார். அவரின் மோட்டார் சைக்கிளிலிருந்து 6 சீனா நாட்டுப் பாஸ்போர்ட்களும் 1 இந்தோனேசிய பாஸ்போர்ட்டும் 1 வியட்நாம் நாட்டுப் பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதிகாரிக்குச் சொந்தமான 2 கைத்தொலைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக Roszita Dim தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட கைத்தொலைப்பேசியின் மூலமாகப் பல்வேறு தகவல்களைச் சேமித்து வருவதால் கைது செய்யப்பட்ட 32 வயது குடிநுழைவுத் துறை அதிகாரியுடன் தொடர்புடையவர்களையும் விசாரிக்கவிருப்பதாக ஜொகூர் மாநில எல்லை பாதுகாப்பு கட்டுபாட்டு ஆணையத்தின் தலைமை அதிகாரி Roszita Dim விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



