மலாக்கா தேர்தல் - 8 தொகுதிகளில் பெர்சாத்து போட்டி!

top-news

கோலாலம்பூர், அக் 30: மலாக்கா மாநிலத் தேர்தலில் பெர்சாத்து கட்சி எட்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. அவற்றில் ஐந்து தொகுதிகளை கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய முன்னணி வென்றிருந்தது.

Kelebang, Lendu, Gadek, Sungai Udang, Pantai Kundor, Pengkalan Batu, Ayer Keroh மற்றும் Bemban ஆகிய எட்டு தொகுதிகளில் பெர்சாத்து போட்டியிடுகிறது.

பெங்காலான் பத்து தொகுதியில் ஹங் துவா ஜெயா பெர்சாத்து துணைத் தலைவர் நோர்ஹிஸாம் ஹசான் பக்தியும், லெண்டு தொகுதியில் நஸ்ரி ரம்லியும் போட்டியிடுகின்றனர்.

கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து கட்சித் தலைவர்கள் மலாக்காவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பெர்சாத்து பொதுச் செயலாளர் அஸ்மின் அலி தெரிவித்தார்.

பெர்சாத்து சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரம் முழுவதும் தாங்கள் மலாக்காவில் தங்கியிருக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

Pantai Kundor தொகுதியில் சிலாங்கூர் பெர்சாத்து தலைவர்கள் பிரசாரப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

லெண்டு தொகுதியில் கெடா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர்களும், காடெக் தொகுதியில் திரங்கானு மற்றும் பகாங் மாநிலத் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்.

சுங்கை ஊடாங் தொகுதியில் கூட்டரசுப் பிரதேசம் மற்றும் கிளந்தான் தலைவர்களும், பெங்காலான் பத்து தொகுதியில் பினாங்கு தலைவர்களும், ஆயர் கெரோ தொகுதியில் பெர்லிஸ் தலைவர்களும் தேர்தல் பணிகளை முன்னெடுப்பார்கள் என அஸ்மின் அலி தெரிவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்