அனைத்து பள்ளிகளிலும் மலாய் மொழியும் வரலாறும் கட்டாயமாக்கப்படும்! - பிரதமர் அறிவிப்பு
- Shan Siva
- 20 Jan, 2026
புத்ராஜெயா, ஜன 20: மலேசியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மதப் பள்ளிகள், சர்வதேச பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட, தேசிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மலாய் மொழியும் வரலாறும் கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அன்வார்
இப்ராஹிம் இந்த அறிவிப்பை இன்று புத்ராஜெயாவில் தேசிய கல்வித் திட்டத்தை
அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
இந்த விதிமுறை, பள்ளியின் அதிகாரப்பூர்வ
நேரத்திலேயே நடைமுறையில் இருக்கும் என்றும், Unified Examination Certificate (UEC) வழங்கும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும்
என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2027 ஆம் ஆண்டிலிருந்து, படிவம் மூன்று (Form 3) மாணவர்களுக்கு மலாய், ஆங்கிலம், கணிதம்,
அறிவியல் மற்றும் வரலாறு
பாடங்களில் மதிப்பீடுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதேபோல், படிவம் 6 மற்றும் Matriculation
பாடத்திட்டங்கள், உயர் கல்வி அமைச்சின் மேற்பார்வைக்கு கொண்டு வரப்படும்
என்றும், இதன் மூலம் பட்டப்படிப்பு கல்விக்கு மாணவர்கள்
எளிதாக மாற முடியும் என்றும் பிரதமர் கூறினார்.
மேலும், தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி கல்வி (TVET) 2027 முதல் தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிகளில்
அறிமுகப்படுத்தப்படும் என்றும்,
இதில் டிஜிட்டல் மற்றும்
தொழில்நுட்ப திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர்
தெரிவித்தார்.
ஆசிரியர் அறைகளை
மேம்படுத்தவும் புதுப்பிக்கவும் RM
100 மில்லியன்
ஒதுக்கப்படும் என்றும் அன்வார் இப்ராஹிம் கூறினார். இதனுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்து தொடக்க பள்ளிகளும் ஐந்து
மேல்நிலை பள்ளிகளும் “Inspiration
Schools” எனத் தேர்வு செய்யப்படும்.
இந்த பள்ளிகள், நிர்வாக திறன், அடித்தள வசதிகள், பகாசா மலாய்,
ஆங்கிலம் மற்றும் STEM கல்வித் தரம் ஆகியவற்றில் மாதிரி பள்ளிகளாக
உருவாக்கப்படும்.
மேலும், STPM, Matriculation,
Foundation அல்லது Diploma பாடங்களில் 4.0 CGPA பெறும் மாணவர்களுக்கு
அரசுப் பல்கலைக்கழகங்களில் உறுதியான இடம் வழங்கப்படும் என்றும் பிரதமர்
அறிவித்தார்.
மாற்றுத் திறனாளி
மாணவர்களுக்கு, முழுமையான இலவச கல்வி வழங்கப்படும் என்றும், 3,000 மாணவர்கள் அரசுப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் மற்றும் கம்யூனிட்டி கல்லூரிகளில் கட்டண
விலக்கு பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
STPM சிறந்த மாணவர்களுக்கு 3,000 கூடுதல் பல்கலைக்கழக இடங்கள் மற்றும் 10,000 கூடுதல் உதவித்தொகைகள், இதில் 5,800 உதவித்தொகைகள் பின்தங்கிய குடும்பங்களுக்கு
ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பொது கல்வி (General Studies) பகாசா மலாய் மொழியில் கற்பிக்கப்படும் என்றும், இதில் மலேசிய அரசியலமைப்பு மற்றும் தேசிய வரலாறு முக்கியமாக
இடம்பெறும் என்றும் பிரதமர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



