மலேசியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விரிவான பொருளாதார கூட்டாண்மை!

- Muthu Kumar
- 15 Jan, 2025
அபுதாபி, ஜன 15:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் 2025 ஆம் ஆண்டின் முதல் சர்வதேசப் பயணமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம் நம்பிக்கைக்குரிய பலன்களை அளித்துள்ளது.
இந்தப் பயணம், மலேசிய அரசாங்கத்திற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திற்கும், முன்னணி வளைகுடா நிறுவனங்களுக்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்தி, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மிக முக்கியமான சாதனையாகும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை குறைந்தது 60% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *