ஐ.நா சபையில் அதிக வாக்குகள் பெற்று மலேசியா ECOSOC உறுப்பினராகத் தேர்வு!
- Shan Siva
- 05 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 5: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வின் போது நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று, மலேசியா 2027-2029 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் (ECOSOC) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற தேர்தலில், கலந்துகொண்டு வாக்களித்த 186 உறுப்பு நாடுகளில் இருந்து மலேசியா 184 வாக்குகளைப் பெற்றதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பன்முகத்தன்மை, நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் மலேசியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள நம்பிக்கைக்கு இந்தத் தேர்வு ஒரு வலுவான சான்றாகும் என்று அமைச்சு கூறியது.
பொருளாதார நிச்சயமற்ற தன்மை, மனிதாபிமான நெருக்கடிகள், சமத்துவமின்மை மற்றும் காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகள் உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான முயற்சிகளுக்கு மலேசியா ஆதரவளிக்கும் என்றும் அமைச்சு மேலும் கூறியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



