25% விழுக்காடு வரி தாக்கத்தை எதிர்கொள்ள மலேசியா தயாராக வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 11-

மலேசிய இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 விழுக்காட்டு வரி ஆகஸ்ட் முதலாம் தேதி அமலுக்கு வரவுள்ளது.இன்னும் மூன்று வாரகால அவகாசம் இருக்கும் நிலையில் வெள்ளை மாளிகையுடனான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும் அதன் சாத்தியங்களையும் எதிர்கொள்ள அது தயாராக இருக்க வேண்டும் என்கிறார் வருமான வரி ஆலோசகர் தினேஷ் கண்ணா.

முன்னதாக 24 விழுக்காட்டு வரியை அறிவித்த அமெரிக்கா தற்போது மலேசியா உட்பட ஜப்பான், தென் கொரியா, கசகஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காட்டு வரியை அறிவித்துள்ளது.இந்நிலையில், அதில் உள்ள விலக்கு, சட்டங்கள் குறித்து தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்று தினேஷ் கண்ணா தெரிவித்தார்.

உதாரணத்திற்கு, அவர்களுக்கு 100 ரிங்கிட் இங்கிருந்து நாம் விலையில் ஒரு பொருளை இறக்குமதி செய்கிறோம் என்றால், அந்த 100
ரிங்கிட்டிற்கு 25 விழுக்காட்டு வரி விதிக்கப்படும் என்ற அவசியமில்லை. அமெரிக்க விதிகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அங்கு பல்வேறான வர்த்தகச் சட்டங்கள் உள்ளன. பல விலக்குகள் உள்ளன.

அந்த 100 ரிங்கிட் பொருள் 90 ரிங்கிட்டாக கணக்கிடப்பட்டு அதிலிருந்து 25 விழுக்காட்டு வரி விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, அதன் சட்டத்தைப் புரிந்துகொண்டு அதற்கான தயார்நிலைப் பணிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.விநியோகச் சங்கிலி மறுகட்டமைப்பை மேற்கொள்ள வேண்டும்.ஆவணங்களும் தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் விவரித்தார்.

இந்த வரி விதிப்பினால் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரியளவிலான மாற்றம் மலேசியாவிற்கு ஏற்படவிருப்பதோடு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான
வரியிலும் தாக்கத்தை விவரித்தார். உண்டாக்கும் என்று தினேஷ் விவரித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *