இந்தோனேசிய பொது பூப்பந்து போட்டி மலேசிய இரட்டையர் அணி அதிர்ச்சித் தோல்வி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 6-

மலேசிய பூப்பந்து இரட்டையர் அணியின் முதன்மை விளையாட்டாளர்களாண ஆரோன் சியாவும் சோ ஹுய் இக்கும் இந்தோனேசிய பொது பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். இவ்வணியினர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிங்கப்பூர் பொது பூப்பந்து போட்டியில் வாகை சூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் பேராதரவுக்கு மத்தியில் கலமிறங்கிய நம் அணி ஆட்டக்காரர்கள். டென்மார்க்கின் ராஸ்மஸ் க்ஜேர்-பிரெடெரிக் சோகார்ட் இரட்டையரிடம் தோல்வியடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஜகார்த்தாவின் இஸ்டோரா செனயானில் நடைபெற்ற சூப்பர் 1000 தரவரிசை தொடரில், இந்த இரட்டையர் 59 நிமிடப் போராட்டத்தில் 13-21, 21-19, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.

முதல் செட்டில் தோல்வியைத் தழுவினாலும் நம் அணி இரண்டாவது செட்டில் அருமையாக விளையாடி அச்சுற்றை வென்றது.இருப்பினும் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்றில்
களமிறங்கிய நம் அணி செய்த சிறு சிறு தவறினால் வெற்றி வாய்ப்பு கைவிட்டுப்போனது. போட்டிக்குப் பின் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் கேள்விகளுக்குப் பதிலளித்த வூய் யிக், எதிரணி சிறப்பாக விளையாடியதை ஒப்புக்கொண்டு, வரவிருக்கும் தொடர்களில் மீண்டும் வெற்றியைப் பதிவு செய்ய போராடவிருப்பதாக உறுதியளித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆரோன்-வூய் யிக், சிங்கப்பூர் ஓபனில் தென் கொரியாவின் கிம் வோன் ஹோ-சியோ சியூங் ஜே இரட்டையரை 15-21, 21-18, 21-19 என்ற கணக்கில் இறுதிப் போட்டியில் வென்று பட்டம் வென்றனர்.
இதற்கிடையில், மற்ற இரண்டு மலேசிய ஆண்கள் இரட்டையர்களும் புதன்கிழமை முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர்.

சூங் ஹோன் ஜியான்-முகம்மது ஹைக்கல் நஸ்ரி, 2021 உலக சாம்பியன்களான ஜப்பானின் தகுரோ ஹோகி-யூகோ கோபயாஷி இரட்டையரிடம் 13-21. 9-21 என்ற கணக்கில் எளிதாக தோல்வியடைந்தனர். அதேபோல், ஓங் யூ சின்-டியோ ஈயி. சீனாவின் லியாங் வெய் கெங்-வாங் சாங் இரட்டையரிடம் 21-23, 20-22 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர். மலேசியாவின் முதன்மை பெண்கள் இரட்டையரான பேர்லி டான்-எம். தினா, தைவானின் சங் ஷுவோ யூன்-யு சியன் ஹுய் இரட்டையரை 21-16, 21-17 என்ற கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

Aaron Chia dan Soh Wooi Yik mengalami kekalahan mengejut dalam pusingan pertama Indonesia Open meskipun baru menjuarai Singapore Open. Dua lagi pasangan beregu lelaki Malaysia turut tewas, manakala beregu wanita Pearly Tan dan M. Thina mara ke pusingan kedua.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *