மலேசியாவின் பொருளாதாரம் 4.4 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது!
- Muthu Kumar
- 16 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 16-
2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், மலேசியாவின் பொருளாதாரம் 4.4 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.உள்நாட்டு தேவையில் வலுவான விரிவாக்கம், தொடர்ச்சியான ஏற்றுமதி வளர்ச்சியால் இந்த அடைவுநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, மின்சாரம், மின்னியல், ஏஐ துறையில், வீட்டுச் செலவு அதிகரிப்பு. வலுவான முதலீட்டு செயல்பாடு மற்றும் நீடித்த ஏற்றுமதி செயல்திறன் ஆகியவை இவ்வளர்ச்சிக்கு வழிவகுத்து உள்ளதாக மலேசியப் புள்ளிவிவரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முஹமட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.செலவுகளின் படி, உள்நாட்டு தேவை முக்கியமாக அதிக பயன்பாடு மற்றும் வலுவான முதலீட்டு நடவடிக்கைகளால் செயல்படுகிறது.
அதேவேளையில், தொடர்ச்சியான கட்டமைப்பு முதலீட்டினாலும், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் அதிக முதலீட்டினாலும் முதலீட்டு வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, தரவு மையம், ஐ.டி தொடர்பான உபகரணங்கள், பொது நிறுவனங்களின் வலுவான மூலதனச் செலவுகளை உள்ளடக்கியுள்ளன என்றார் அவர்.
நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து பேசியபோது டாக்டர் முஹமட் உசிர் அவ்வாறு குறிப்பிட்டார். எனினும், சுரங்கம் தொடர்பான ஏற்றுமதிகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் அதிக மூலதன இறக்குமதிகள் காரணமாக நிகர ஏற்றுமதிகள் குறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



