2025 ஆம் ஆண்டில் மலேசியாவின் ஜிபிஎஸ் வருவாய் வெ. 28.14 பில்லியனாக உயரும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 31-

தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கத்தின் காரணமாக உலக அரங்கில், மலேசிய அனைத்துலக வணிகச் சேவை அதிவளர்ச்சி அடைந்துள்ளது.

நான் தொடக்கி வைத்த ஜிபிஎஸ் ஆசியான் உச்சு நிலை மாநாடு 2025 இதற்கு சான்று பகர்கிறது. "ஜிபிஎஸ் 5.0, மனிதரை மையப்படுத்திய செயற்கை நுண்ணறிவின் வழி. பெறப்படும் விளைவை மையமாக கொண்டது என்கிற கருப்பொருளில் இந்த மாநாடு அனைத்துலக வணிக சேவைகள் (ஜிபிஎஸ்) என்பது உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் ஒருங்கிணைந்த சேவைகளின் தொகுப்பாகும். இதில் நிதி. மனிதவள மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்றவை அடங்கும்.

இந்த உச்சநிலை மாநாடு இரண்டு முக்கிய சிறப்பம்சங்களை உள்ளடக்கியது. 2025இன் ஜிபிஎஸ் மலேசியா அரையாண்டு அறிக்கை மற்றும் மலேசிய அனைத்துலக வணிகச் சேவை அமைப்புக்கும், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்துக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியன இந்த மாநாட்டில் சிறப்பம்சங்களாகும்.மலேசியாவில் 2022ஆம் ஆண்டிலிருந்து ஜிபிஎஸ் நிறுவனங்கள் 66.8 விழுக்காடு அதிகரித்திருக்கும் நிலையில், இதனால் தற்போது மொத்தம் 749 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மூலதன முதலீடுகள் 13.5 மடங்காக உயர்ந்துள்ள நிலையில், 2021ஆம் ஆண்டு வெ. 0.73 பில்லியனிலிருந்து, 2024ஆம் ஆண்டில் வெ. 9.87 பில்லியனாக உயர்வு கண்டுள்ளது.இதன் பலனாக, 36,000-க்கும் அதிகமான உயர்தர வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் ஜிபிஎஸ் வருமானம் வெ. 28,14 பில்லியனாக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது மலேசியா. உலகளவில் "Global Services Location Index" இல் மூன்றாவது இடத்தில் உள்ளது.அதோடு, டிஜிட்டல் போட்டியாற்றல் திறன், புத்தாக்கம் மற்றும் முதலீட்டின் நம்பிக்கை ஆகியவற்றில், ஆசியான் நாடுகளுக்கிடையே மலேசியா, தொடர்ந்து முதல் மூன்று இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்த மத்திய ஆண்டு அறிக்கை, குறிப்பிட்ட துறையின் சாதனைகள், எதிர்கொண்ட சவால்கள், மற்றும் எதிர்காலப் பாதையை தெளிவாகக் காட்டக்கூடிய முன்னேற்ற குறியீடாக விளங்குகிறது. அதோடு இந்த அறிக்கை, 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியா செயற்கை நுண்ணறிவு நாடாக உருமாற்றம் கொள்வதை துரிதப்படுத்தும்.அதோடு இந்த மாநாட்டில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தம் தொழில் துறை மற்றும் கல்வித் துறை இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, வருங்காலத்தில் ஜிபிஎஸ் அமைப்பில் திறன்சார் வல்லுநர்களை உருவாக்கும்.

தொழில்துறை வல்லுநர்கள், மாணவர்கள் பணியிடத்தில் சேரும்போது அவர்களை பணியிடத்துக்குத் தயார் செய்வதற்கும், சமகால வாழ்வியல் ஆய்வுகளை வழங்குவதற்கும் வழிவகுக்கும் வேளை, பட்டம் பெற்ற பின் வேலை வாய்ப்புகளை பெறவும் இது போன்ற திட்டங்கள் உறுதுணையாக இருக்கும். இத்தகைய ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் தொழில் துறையினர் மாணவர்களுக்கு நிஜ வாழ்க்கை சம்பவக் களங்களை வழங்கி, அவர்கள் பணி உலகில் சேரும் போது தேவையான அனுபவத்தையும் திறன்களையும் பெறச் செய்ய முடியும்.

இதன் விளைவாக, தொழில் துறையினரும் உயர் கல்வி நிறுவனங்களும் கொண்டுள்ள ஒத்துழைப்பு, மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகு மேலும் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு வழிவகுக்கும்.

எனவே, இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக ஜிபிஎஸ் மலேசியாவை நான் பாராட்ட விரும்புகிறேன். அதைவிட முக்கியமாக, மலேசியாவை ஓர் இலக்கவியல் நாடாக மாற்றுவதில் அவர்கள் எடுத்துக்கொண் முயற்சிகளையும், நமது நாட்டின் இலக்கவியல் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்கள் அளிக்கும் பெரும் பங்களிப்பையும் நான் மதிக்கிறேன் என்று இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *