குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் மலாய்காரர்கள்! மகாதீர் எச்சரிக்கை

top-news

கோலாலம்பூர், அக் 26: மலாய்க்காரர்களில் சிலர் குறுக்கு வழிகளில் முன்னேறவும், குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டவும் முயல்வது அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக அமையலாம் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது எச்சரித்துள்ளார்.

குறைந்த முயற்சியில் அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில் நேர்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றைக் கைவிட்டு, சிலர் ஊழலில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.

2026ஆம் ஆண்டுக்கான எஸ்ஜி4 வர்த்தக மற்றும் பொருளாதார மன்றத்தில் ஆற்றப்பட்ட உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும், உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து மகாதீர் இன்னும் முழுமையாகக் குணமடையாததால், அவரது உரையை மகன் தான்ஸ்ரீ மொக்ஸானி மகாதீர் வாசித்தார்.

கெடா, திரெங்கானு, கிளந்தான், பெர்லிஸ் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய எஸ்ஜி4 கூட்டமைப்பு பாஸ் கட்சியின் ஆட்சியில் உள்ளது.

இஸ்லாம் வலியுறுத்தும் நேர்மை, நாணயம், தூய்மை உள்ளிட்ட நற்பண்புகளை மலாய்க்காரர்கள் கடைப்பிடித்தால், வர்த்தகம் மற்றும் தொழில்முனைவுத் துறைகளில் சிறந்து விளங்க முடியும் என்றும் மகாதீர் கூறினார்.

மோசடி செய்வதும் திருடுவதும் கடுமையான தண்டனைக்குரியவை என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதேவேளை, நேர்மைக்கு உயர்ந்த மதிப்பு அளிக்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, உணவு மற்றும் பானத் துறையில் தூய்மை மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், இஸ்லாமியக் கொள்கைகளை முறையாகப் பின்பற்றினால் மலாய்க்காரர்கள் வர்த்தகத் துறையில் அதிக வரவேற்பைப் பெறுவார்கள் என்றார்.

எஸ்ஜி4 மாநிலங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்ட இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்து வந்தாலும், அந்த மாநிலங்களின் மிகப்பெரிய சொத்து அங்குள்ள மக்கள்தான் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

மக்களின் இலக்குகளும் கனவுகளும் ஒன்றிணையாவிட்டால், அங்குள்ள வளங்களைப் பயன்படுத்துவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பெரிதாக இருக்காது என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்கிடையே, எஸ்ஜி4 மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வர்த்தகத் திறன் குறைவு என்ற கருத்தையும் மகாதீர் நிராகரித்தார்.

கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் மேற்கு கடற்கரை மாநிலங்களில் வெற்றிகரமாகத் தொழில் நடத்தும் பல மலாய் தொழில்முனைவோர், இந்த நான்கு மாநிலங்களிலிருந்தே வந்தவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்