லாரியஸ் விருது வென்ற Carlos Alcaraz, Aryna Sabalenka

top-news
FREE WEBSITE AD

உலக விளையாட்டுத் துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான Laureus World Sports Awards 2026 விழாவில் டென்னிஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதில் ஆண்கள் பிரிவில் ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்காரஸ் “சிறந்த விளையாட்டு வீரர்” விருதையும், பெண்கள் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா “சிறந்த விளையாட்டு வீராங்கனை” விருதையும் கைப்பற்றினர்.

மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த விழாவில், 2025ஆம் ஆண்டில் சாதித்த சிறப்பான ஆட்டத்தின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அல்காரஸ் கடந்த ஆண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் உட்பட பல முக்கிய வெற்றிகளைப் பதிவு செய்து உலக நம்பர் 1 இடத்தை மீண்டும் கைப்பற்றியிருந்தார்.

அதேபோல், சபலென்கா பெண்கள் டென்னிஸில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பல கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டிகளில் விளையாடியதுடன் உலக தரவரிசையில் முன்னிலை வகித்தார்.

இந்த விருது விழாவில், அணிகள் பிரிவில் Paris Saint-Germain (PSG) “சிறந்த அணி” விருதை வென்றது. மேலும், பல்வேறு விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கிய வீரர்களும் கவுரவிக்கப்பட்டனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *