அரசு கிளினிக்குகளில் வாக்-இன் சேவைகள் தொடரும்! - சுகாதார அமைச்சர்

top-news
FREE WEBSITE AD

சமூக ஊடகங்களில் பரவி வரும், அரசு கிளினிக்குகள் இனி வாக்-இன் (Walk-in) நோயாளிகளை ஏற்கவில்லை என்ற தகவலை சுகாதார அமைச்சகம் முற்றிலும் மறுத்துள்ளது.
பெரும்பாலான ஆலோசனைகள் முன்பதிவு (appointment) அடிப்படையில் நடைபெற்றாலும், அரசு சுகாதார கிளினிக்குகள் வாக்-இன் நோயாளிகளையும் தொடர்ந்து ஏற்றுக் கொண்டே இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அவசர நிலை நோயாளிகள் மூத்த குடிமக்கள் தொழில்நுட்ப வசதி குறைவாக உள்ளவர்கள் ஆகியோருக்கு வாக்-இன் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படும் எனவும் அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

முன்பதிவு இல்லாமல் வரும் நோயாளிகளும் சிகிச்சை பெறுவார்கள். ஆனால், அவர்கள் முதலில் ட்ரையாஜ் (triage) எனப்படும். அவசர நிலைக்கான பரிசோதனை செயல்முறைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்று அமைச்su தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு நபருக்கும் தொழில்நுட்ப அணுகல் ஒரே மாதிரி இருக்காது என்பதை அமைச்சகம் நன்கு உணர்கிறது என்றும் கூறியுள்ளது.

சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சமமான மற்றும் நியாயமான சுகாதார சேவையை உறுதி செய்வதற்காக வாக்-இன் சேவைகள் தொடரும் என சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *