நான் அனைவருக்குமான தலைவன்! - அன்வார்
- Shan Siva
- 14 Nov, 2026
பிரிக்ஃபீல்ட்ஸ், நவ 14: இந்திய சமூகத்தின் கல்வி, நலவாழ்வு மற்றும் தமிழ்மொழி வளர்ச்சிக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி, இந்து ஆலயங்கள், இந்திய வர்த்தகர்கள் மற்றும் நகர்ப்புற, தோட்டப்புறங்களில் வாழும் ஏழை இந்தியர்களின் நலன் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பிரிக்ஃபீல்ட்ஸில் நடைபெற்ற தேசிய அளவிலான தீபாவளிக் கொண்டாட்டத்தில் பேசிய அவர், ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கும்போது அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கும் தலா 200 ரிங்கிட் உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், இனம், மதம், மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடனும் பரஸ்பர மரியாதையுடனும் மலேசியர்கள் வாழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்து மலேசியர்களுக்குமான தலைவராகவே தொடர்ந்து செயல்பட விரும்புவதாகவும், அரசியல் நிலைத்தன்மைக்காக மலாய் ஆதிக்கக் கொள்கைகளை ஏற்கப்போவதில்லை என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மேலும், இன உணர்வுகளைத் தூண்டி ஊழல், மோசடிப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப சில தரப்பினர் முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், வறுமை அனைத்து இனங்களிலும் இருப்பதால் அனைவரின் நலனுக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கும் என்றார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

