சென்னை போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் பதவியேற்பு

top-news
FREE WEBSITE AD

சென்னை, மே 22-

சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராகக் கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் உள்துறை வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில், அபின் தினேஷ் மோடக் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டு இன்று காலை பொறுப்பேற்றார்.

1996 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக இந்திய காவல் பணியில் இணைந்த அமல்ராஜ், திருப்பூரில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் தர்மபுரி, தேனி, காஞ்சீபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார். மேலும் ராமநாதபுரம், திருச்சி, சேலம் ஆகிய சரகங்களில் டி.ஐ.ஜி. மற்றும் கோவை, சேலம், திருச்சி நகரங்களில் கமிஷனராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *