வெள்ளத்தில் மூழ்கிய தாமான் ஸ்ரீ மூடா
- Shan Siva
- 09 Nov, 2026
ஷா ஆலாம், நவ 9: ஷா ஆலாம் செக்ஷன் 25-இல் உள்ள வெள்ளப் பாதிப்பு அதிகமுள்ள தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்புப் பகுதி, நேற்று பிற்பகல் பெய்த கனமழையால் மீண்டும் திடீர் வெள்ளத்தில் மூழ்கியது.
பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை பெய்த கனமழையைத் தொடர்ந்து, செக்ஷன் 26-இல் உள்ள கம்போங் பாரு ஹைகோம் பகுதியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
கால்வாய்களில் நீர் நிரம்பி வழிந்ததால், பல இடங்களில் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை தெரிவித்துள்ளது. இருப்பினும், இதுவரை பொதுமக்கள் யாரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படவில்லை.
மாலையில் மழை நின்றபோதிலும், வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதற்கிடையே, வெள்ள அபாயம் உள்ள செக்ஷன் 22-இல் உள்ள ஜாலான் கெபுன் பூங்கா, செக்ஷன் 13 மற்றும் ஜாலான் கெபுன் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கனமழையைத் தொடர்ந்து கிள்ளான் புக்கிட் திங்கி பகுதியில் உள்ள வணிக வளாகத்திலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

