2 நோயாளியுடன் விபத்துக்குள்ளான AMBULANS! சிறுவன் படுகாயம்!
- THINAGAREN SANGGAREN
- 10 Jun, 2026
ஜூன் 10,
ஜெர்தேவிலிருந்து பாசிர் அகாருக்கு 2 நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் 16 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளியும் காயம் அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சென்றுக் கொண்டிருக்கும் போது திடிரேன ஒரு கார் சாலையைக் கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக Besut மாவட்டக் காவல் ஆணையர் Mohd Rozaime Rahim தெரிவித்தார்.
இந்த விபத்தில் 3 கார்கள் சேதமடைந்திருப்பதாகவும் 4 பேர் சிராய்ப்புக் காயங்களுடன் உயிர் தப்பியதாக Besut மாவட்டக் காவல் ஆணையர் Mohd Rozaime Rahim தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மேலதிகச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் விபத்துக்குக் காரணமான வாகனமோட்டியைக் காவல்துறை விசாரித்து வருவதாகவும் Besut மாவட்டக் காவல் ஆணையர் Mohd Rozaime Rahim தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



