அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர்; மலேசியாவில் சந்திக்கும் அரசியல் தலைவர்கள்!
- THINAGAREN SANGGAREN
- 03 Apr, 2026
ஏப்ரல் 3,
ஈரானில் இஸ்ரேலும் அமெரிக்காவும் மேற்கொண்டிருக்கும் ஆயுதப் போரால் மலேசியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை மீட்டுருவாக்கம் செய்ய பிரதமர் அன்வார் மாநில முதலமைச்சர்கள் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவித்தார். குறிப்பாக எரிசக்தி தட்டுப்பாட்டிலிருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளுக்கு மாநில அரசின் ஆதரவையும் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டதாக பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
தேசிய அரசாங்கமாக இருந்தாலும் மாநில அரசாங்கமாக இருந்தாலும் மக்கள் வாழ்வியலைப் பாதிக்கும் போது நாம் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். இந்த சந்திப்புக் கூட்டத்தில் சுமுகமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் எரிசக்தி விநியோகதில் மாநில அரசும் மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாகவும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



