உலகக் கோப்பையை அபார வெற்றியுடன் தொடங்கிய அமெரிக்கா; பராகுவேவை 4-1 என வீழ்த்தியது
- Surendran Sumdraraj
- 13 Jun, 2026
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 13 –
சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரை அமெரிக்கா அணி அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ‘குரூப் டி’ பிரிவு தொடக்க ஆட்டத்தில் பராகுவே அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முழு மூன்று புள்ளிகளையும் கைப்பற்றியது.
ஆட்டம் தொடங்கிய ஏழாவது நிமிடத்திலேயே பராகுவே வீரர் டேமியன் போபடில்லா அடித்த சுய கோல் மூலம் அமெரிக்கா முன்னிலை பெற்றது. அலெக்ஸ் பிரீமேன் தொடங்கிய சிறப்பான தாக்குதல் முயற்சியில் வெஸ்டன் மெக்கென்னி மற்றும் கிறிஸ்டியன் புலிசிக் இணைந்து உருவாக்கிய அழுத்தமே அந்த சுய கோலுக்கு வழிவகுத்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முன்னணி தாக்குதல் வீரர் போலரின் பாலோகன் முதல் பாதியிலேயே அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அணியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தினார்.
இரண்டாவது பாதியிலும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி மேலும் ஒரு கோலைப் பதிவு செய்தது. மறுபுறம், பராகுவே அணி ஆறுதல் கோல் ஒன்றை மட்டுமே அடிக்க முடிந்தது.
சொந்த ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெரிக்கா, இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை தொடரை தன்னம்பிக்கையுடன் தொடங்கியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



