தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்!
- Shan Siva
- 11 Sep, 2026
சென்னை, செப் 11: தமிழறிஞரும், பட்டிமன்ற
நடுவருமான சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் இன்று காலமானார்.
மதுரை, திருமங்கலம், சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு சாலமன் பாப்பையா
பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப்
பணிபுரிந்துள்ளார்.
மதுரை அரசடியில் உள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன்
வசித்து வந்த சாலமன் பாப்பையா, தனியார் தொலைக்காட்சியின் பட்டிமன்றங்களில் நடுவராகப்
பொறுப்பேற்று பேசி வந்தார். அவரது பேச்சுக்குப் பொதுமக்கள் மத்தியில் அதிக
வரவேற்பு கிடைத்தது. இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்ற மேடைகளை, வெகு ஜனங்களும் ரசித்துக் கொண்டாடும் வகையில் மாற்றியமைத்ததில்
இவரின் பங்கு அளப்பரியது.
பட்டிமன்றங்கள் மற்றும் பொது மேடைகளில் நகைச்சுவை கலந்து
சாலமன் பாப்பையா பேசி வந்தார். இதனால் உலகம் அவரை ஆராதித்து வரவேற்றது.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் சாலமன் பாப்பையா
பெற்றுள்ளார். இது தவிர முத்தமிழ் பேரரறிஞர் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் இன்று காலமானார்.
நடுவராக மட்டுமன்றி எழுத்தாளராக 'புறநானூறு புதிய வரிசை வகை', 'பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பார்வை', 'திருக்குறள் உரையுடன்' எனப் பல்வேறு நூல்களை சாலமன் பாப்பையா எழுதியுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



