நான் பிரதமருக்கு அடுத்த நிலையில் உள்ளவன்! ஜொகூருக்கும் மத்திய அரசுக்குமான உறவை வலுப்படுத்துவேன்! - ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 2: ஜொகூரில் பாரிசான் நேஷனல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜொகூர் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே வலுவான உறவுகளை வளர்க்க தாம் உதவுவதாக துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

தாம் பிரதமருக்கு அடுத்த நிலையில் இருப்பதால், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையிலான உறவுகள் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்வது தனது பொறுப்பு என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பெருந்திட்டத்தை மத்திய அரசு மீண்டும் மீண்டும் தாமதப்படுத்தி வருவதாக ஜொகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காசி குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஜாஹிட் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, பாரிசான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜொகூர் அரசுக்கு மத்திய கரசு முழு ஆதரவையும் வழங்கும் வகையில் தமது செயல்பாடுகள் அமையும் என்று ஜாஹிட் தெரிவித்திருந்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *