நான் இன்னும் நஜிப் மனைவிதான்! – ரோஸ்மா மன்சோர்

- Shan Siva
- 03 Feb, 2025
ஷா ஆலம், பிப் 3: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சட்டப்பூர்வமான மனைவி தாம்தான் என்று டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் தனது பெயரைக்
கொண்ட போலி ஃபேஸ்புக் கணக்கு பற்றிய குற்றச்சாட்டுகளை
அவர் மறுத்துள்ளார்.
நஜிப்பின்
முன்னாள் மனைவி என்று பொய்யாகக் கூறும் முகநூல் கணக்கு தனக்குச் சொந்தமானது அல்ல
என்று ரோஸ்மா கூறினார்.
தாம் இன்னும்
டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவிதான் என்றும், பொய்களைப் பரப்பாதீர்கள் என்றும் இன்று ஒரு ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறினார்.
அதோடு, ரோஸ்மா தனது பின்தொடர்பவர்களுடன் போலி கணக்கின்
ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்து கொண்டார்.
தனக்கு ஒரே ஒரு
அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு டிக்டோக் கணக்கு மட்டுமே
இருப்பதாகவும், அவற்றை https://www.facebook.com/Rosmah2022
மற்றும் https://www.tiktok.com/@rosmahmansor2022?_t=ZS-8tbIcBln1AF&_r=1
இணைப்புகள் வழியாக அணுகலாம் என்றும் அவர்
வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *