ஹம்ஸா ஜைனுதீன் எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்
- Shan Siva
- 22 Jun, 2026
கோலாலம்பூர்:
ஹம்ஸா ஜைனுதீன் எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக மீண்டும்
நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் ஜொஹாரி அப்துல் இதனை அறிவித்தார்.
இன்றைய அமர்வில்,
அஹ்மத் சம்சுரி மொக்தாருக்குப் பதிலாக ஹம்ஸா
தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஜொஹாரி கூறினார்.
2022 பொதுத்
தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஹம்ஸா, பெர்சாத்து கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி
குழப்பங்களுக்கு மத்தியில் ஏப்ரல் மாதம் அப்பதவியிலிருந்து விலகினார்.
அதனைத் தொடர்ந்து,
பெரிகாத்தான் நேஷனல் தலைவரும் திரெங்கானு
மந்திரி பெசாருமான சம்சுரி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
பிப்ரவரியில்
பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி அணிக்குள்
நிலவிய நிச்சயமற்ற நிலைக்குப் பிறகு ஹம்ஸா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பெர்சாத்து
மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையே நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், பெரும்பாலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு உள்ளது என்ற கேள்விகளை இந்த விவகாரம்
எழுப்பியுள்ளது.
சனிக்கிழமையன்று,
ஹம்ஸா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதை
உறுதிசெய்து, முகைதீனின்
இருக்கை உட்பட மக்களவையின் இருக்கை ஏற்பாடுகளில் மாற்றங்களைக் கோரி, பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசினிடமிருந்து தனக்கு
ஒரு கடிதம் வந்ததாக ஜொஹாரி கூறினார்.
கடந்த மார்ச்
மாதம் மக்களவை கூடியபோது, 'ஜி' பிரிவில் ஹம்ஸாவிற்கு அருகில் அமர்ந்திருந்த முகைதீன்,
தற்போது 'இ' பிரிவில் ராட்ஸி
ஜிடினுக்கு அருகில் அமர்ந்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



