ஹம்சாவின் ரீசெட் இயக்கத்தில், பெர்சாத்துவின் 2 லட்சம் உறுப்பினர்களா?! - அது தவறான கூற்று
- Shan Siva
- 26 May, 2026
கோலாலம்பூர், மே 26: ஹம்ஸா ஜைனுதீனின் 'ரீசெட்' இயக்கத்திற்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாகக் கூறப்படும் கூற்றை மலாக்கா பெர்சாத்துவின் தகவல் பிரிவுத் தலைவர் ஹிஷாமுதீன் அப்துல் கரீம் நிரகரித்துள்ளார்.
மாநிலப் பிரிவின் முன்னாள் தலைவர் ரஹீம் தம்பி சிக்கின் இந்தக் கூற்று, கள யதார்த்தத்திலிருந்து முற்றிலும் தொடர்பற்றது என்று கூறினார்.
தேசிய அளவில் அரசியல் ரீதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான மலாக்காவின் முன்னாள் முதலமைச்சரின் தீவிர முயற்சியை இது பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
கோத்தா மலாக்கா பெர்சாத்து தலைவரான ஹிஷாமுதீன், கட்சிக்குள் தனக்கு இன்னும் பெரும் செல்வாக்கு இருப்பது போல ரஹீம் பெர்சாத்துவின் உள் விவகாரங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்றும் கூறினார்.
லட்சக்கணக்கான உறுப்பினர்கள் 'ரீசெட்' இயக்கத்தை ஆதரிக்கிறார்கள் என்ற அவரது கூற்று, தனக்கு இன்னும் அரசியல் பலம் இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கும் ஒரு முயற்சி மட்டுமே.
சிலர் கட்சியை விட்டு வெளியேறத் தேர்ந்தெடுப்பதால் மட்டும் பெர்சாத்து கட்சி வீழ்ச்சியடையாது.கட்சி மிகக் கடுமையான சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அதன் அடிமட்ட உறுப்பினர்களின் பலம் மற்றும் அதன் போராட்டத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையின் காரணமாக உறுதியாக நிற்கிறது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



