நடு ரோட்டில் நிர்வாணமாகச் சென்ற நபர்! மருத்துவமனையில் அனுமதி
- Shan Siva
- 20 Apr, 2026
பெட்டாலிங் ஜெயா: கடந்த
வாரம் பினாங்கு, பாயான் லெப்பாஸில் உள்ள
ஜாலான் லெபு புக்கிட் ஜம்புல் சாலையில் நிர்வாணமாக நடந்து சென்ற நபர், காவல்துறையினரால் பினாங்கு மருத்துவமனையின்
மனநலப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து
வியாழக்கிழமை காலை புகார் பதிவு செய்யப்பட்டதாகவும், மனநலம் குன்றியதாகக் கூறப்படும் அந்த நபருக்கு சிகிச்சை
அளிக்க காவல்துறையினரும் மருத்துவ உதவியாளர்களும் அனுப்பப்பட்டதாகவும் திமோர் லாவுட்
காவல் துறைத் துணைத் தலைவர் லீ ஸ்வீ சாகே கூறினார்.
சாலையின் நடுவில் நிர்வாணமாக
இருந்த அந்த நபர், மருத்துவ உதவியாளர்களின்
உதவியுடன் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அவர் காவல்துறையினரின் பாதுகாப்புடன்
பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அந்த நபரிடம் எந்த அடையாள
ஆவணங்களும் இல்லாததால், அவரை அடையாளம் காணவும்,
அவரது உறவினர்களைக் கண்டறியவும் காவல்துறையும்
மருத்துவமனையும் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்று லீ ஒரு அறிக்கையில்
தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



