AI.com விற்பனை மூலம் 300 மில்லியனுக்கும் மேல் லாபம் ஈட்டிய மலேசிய தொழில்நுட்ப தொழிலதிபர்

top-news

கோலாலம்பூர், பிப். 10-

மலேசிய தொழில்நுட்பத் துறையில் கவனம் ஈர்த்த ஒரு முக்கிய நிகழ்வாக, தொழிலதிபர் Arsyan Ismail 2025 ஏப்ரலில் உலகப் புகழ்பெற்ற AI.com என்ற இணைய முகவரியை விற்று 300 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளார்.

70 மில்லியன் டாலர் (சுமார் 300 மில்லியன் ரிங்கிட்) மதிப்பிலான இந்த ஒப்பந்தம், உலகளாவிய ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆன்லைன் செய்தி தளம் Says வெளியிட்ட தகவலின்படி, Arsyan Ismail இந்த AI.com இணைய முகவரியை 1993ஆம் ஆண்டில் வெறும் AS$100 (அந்த காலத்தில் சுமார் 256 ரிங்கிட்) செலவில் பதிவு செய்துள்ளார். பல ஆண்டுகளாக வைத்திருந்த இந்த இணைய முகவரி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) துறை வேகமாக வளர்ச்சி அடைந்த நிலையில், தங்கச் சுரங்கமாக மாறியுள்ளது.

தற்போது கிடைத்த தகவலின்படி, AI.com இணைய முகவரி, Kris Marszalek, அதாவது Crypto.com நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியால் வாங்கப்பட்டுள்ளது. இந்த டொமைன் பெயர் 2025 மார்ச் மாதத்தில் 100 மில்லியன் டாலர் கேட்கும் விலையில் பட்டியலிடப்பட்ட நிலையில், இறுதியாக 70 மில்லியன் டாலருக்கு  ஒப்பந்தம் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைய முகவரி விற்பனை, இதுவரை பொதுவெளியில் அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய டொமைன் பெயர் விற்பனையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், இந்த ஒப்பந்தம் பல மாதங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது; காரணம், வாங்கிய தரப்பு AI.com அடிப்படையில் ஒரு புதிய இணைய தளத்தையும் தளவமைப்பையும் உருவாக்கி வந்ததாக கூறப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *