காவல்துறையினரின் பிள்ளைகள் கட்டொழுங்குடன் இருக்க வேண்டும்!

top-news

ஏப்ரல் 16,

சட்ட ஒழுங்கைக் காக்கும் காவல்துறையினர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் கட்டொழுங்கையும் கண்காணிக்க வேண்டும் என கிளாந்தான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat வலியுறுத்தினார். சமீபத்தில் காவல் அதிகாரி ஒருவரின் மகளுடைய பாலியல் காணொலி பரவியது தொடர்பாக நாட்டைக் காக்கும் நேரத்தில் வீட்டை மறக்க வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

காவல் அதிகாரியின் மகள் சம்மந்தப்பட்ட காணொலியை அவரின் மகளின் கைப்பேசியிலேயே வைத்திருந்ததை உறுதிப்படுத்தியதும் சம்மந்தப்பட்ட தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார். பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் காவல் அதிகாரிகளும் பெற்றோர்கள் என்பதை நினைவில் வைக்கும்படியும் பிள்ளைகளில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்தும்படியும் Datuk Mohd Yusoff Mamat வலியுறுத்தினார்.

Ketua Polis Kelantan menggesa anggota polis untuk memantau disiplin anak-anak mereka selepas insiden video lucah melibatkan anak seorang pegawai. Beliau menekankan bahawa menjaga keluarga juga penting walaupun sedang menjaga keselamatan negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *