நடுரோட்டில் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டியவர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 12: கோலாலம்பூர்-சிரம்பான்  நெடுஞ்சாலையில் ஒரு கார் ஓட்டுநரை நோக்கிப் பொம்மை துப்பாக்கியைக் காட்டியதாக நம்பப்படும் ஒரு முதியவரை போலீசார் கைது செய்தனர்.

60 வயதான அந்த நபர், சிக்னல் கொடுக்காமல் தனது பாதையில் வந்த மற்றொரு ஓட்டுநரின் செயல்களால் கோபமடைந்ததாக பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறைத் தலைவர் ஹூ சான் ஹூக் இச்சம்பவம் குறித்துக் கூறினார்.

பின்னர் அந்த நபர் மற்ற ஓட்டுநரை முந்திச் செல்ல முடிவு செய்தார். இருப்பினும், ஓட்டுநர் அவரை மிரட்டும் வகையில் நடந்துள்ளார், பதிலுக்கு அந்த நபர் கண்ணாடியை இறக்கி பொம்மை துப்பாக்கியை மற்ற ஓட்டுநரை நோக்கி நீட்டினார் என்று  ஹூ கூறினார்.

கோலாலம்பூர்-சிரம்பான் நெடுஞ்சாலையில் ஒரு சிவப்பு SUVயின் ஓட்டுநர் துப்பாக்கியை காட்டுவது போன்று காணப்பட்ட 34 வினாடி வீடியோ கிளிப்பின் அடிப்படையில்,  புகார் அளித்த பின்னர், மாலை 7 மணியளவில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

வீடியோவில் இருப்பது சந்தேக நபர் தான் என்பதை ஒப்புக்கொண்டார் என்று ஹூ கூறினார். சந்தேக நபருக்குச் சொந்தமான இரண்டு பொம்மை துப்பாக்கிகள் மற்றும் ஒரு SUV பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த நபர் வேலையில்லாமல் இருப்பதாகவும், அவர் மீது குற்றப் பதிவு இருப்பதாகவும் ஹூ தெரிவித்தார். போலி துப்பாக்கி வைத்திருந்ததாக விசாரணைக்காக அவரை காவலில் வைக்க போலீசார் விண்ணப்பிப்பார்கள் என்று ஹூ கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *