பண்டார் உத்தாமா - ஜோஹான் செத்தியா LRT3 நாளை திறப்புவிழா காண்கிறது! பிரதமர் திறந்து வைக்கிறார்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜூன் 27: பண்டார் உத்தாமாவிலிருந்து ஜோஹான் செத்தியா வரை 37.8 கிலோமீட்டர் நீளமுள்ள LRT3 இலகு ரயில் போக்குவரத்து வழித்தடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு, பயணிகள் சேவைக்குத் தற்போது தயாராக உள்ளது.

இந்த வழித்தடத்தில் வசிக்கும் சுமார் இரண்டு மில்லியன் மக்களுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படும் இதன் அதிகாரப்பூர்வத் தொடக்க விழாவை, பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வர் இப்ராஹிம் நாளை ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஒரு விழாவில் தொடங்கி வைப்பார் என ஷா ஆலம் வழித்தடத் தலைவர் முகமது அரிஃபின் இட்ரிஸ் உறுதிப்படுத்தினார்.

20 நிலையங்களைக் கொண்ட இந்த வழித்தடத்தின் வணிக ரீதியான தொடக்கத் தேதி மற்றும் நேரத்தை பிரதமர் அந்த நிகழ்வின்போது அறிவிப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்.

.ஷா ஆலம் வழித்தடம் இலகு ரயில் வாகனங்களுக்கான இன்வெர்ட்டர் அடிப்படையிலான குளிரூட்டல் மற்றும் ஸ்மார்ட் குளிரூட்டும் அமைப்புகள் போன்ற பசுமை அம்சங்களுடன், நிலைத்தன்மை பேணப்படுவதாக அவர் கூறினார்.

இயற்கையான காற்றோட்டம் மற்றும் பகல் வெளிச்சத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்தும் வகையிலும், ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும் நிலைய வடிவமைப்புகள் கவனமாகத் திட்டமிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

அனைத்து நிலையங்களிலும் சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களுக்கான சரிவுப் பாதைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் மற்றும் ஒவ்வொரு பெட்டியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *