டிரம்பைப் பின்பற்றும் அம்னோ & பாஸ்! மாட் சாபு சாடல்
- Shan Siva
- 13 Nov, 2026
கோலாலம்பூர், நவ 13: அம்னோவும் பாஸ் கட்சியும் இன உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவதாக அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை இன மக்களின் ஆதரவைப் பெற இன மேலாதிக்க அரசியலை முன்னெடுத்ததைப் போல, மலேசியாவில் மலாய்க்காரர்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தி அம்னோவும் பாஸ் கட்சியும் அரசியல் செய்கின்றன என்று அவர் விமர்சித்தார்.
மலாய்க்காரர்கள் தவறு செய்தாலும், அவர்கள் மலாய்க்காரர்கள் என்பதற்காக ஆதரிக்கப்பட வேண்டும் என்ற மனப்பான்மையை உருவாக்குவது தவறு என்றும் மாட் சாபு கூறினார்.
மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு ஆயர் குரோவில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

