நியூசிலாந்தில் நிலச்சரிவு! மலேசியர்களுக்குப் பாதிப்பு இல்லை! - வெளியுறவு அமைச்சு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 23: நியூசிலாந்தில்  நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் மவுண்ட் மவுங்கானுய் முகாமில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வெலிங்டனில் உள்ள மலேசிய உயர் தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சகம் ஒரு ஊடக அறிக்கைய தெரிவித்துள்ளது.

வெலிங்டனில் உள்ள மலேசிய தூதரகம் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்புடைய நியூசிலாந்து அதிகாரிகள் மற்றும் ஆக்லாந்து மலேசிய சங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக அமைச்சு தெரிவித்தது. இது வரை மலேசியர்கள்யாரும் பாதிப்படையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *